மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 68; என்னது.. விஜய்க்கு ஜோடியாக போவது இந்த நடிகையா.! இதை எதிர்பார்க்கலையே!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு வேலைகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி தளபதி ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது. தளபதி 68 படத்திற்காக விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் எனவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்து வருகிறது. மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின்கள் யாராவது நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.