மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. என்னம்மா லுக்கு இது! ஜிகுஜிகு கிளாமர் மாடர்ன் உடையில் சிலுசிலுக்க வைக்கும் பிரியா பவானி ஷங்கர்!!
ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு தாவிய அவர் மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரியா பவானி ஷங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். மேலும் அவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை, பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் அவர் தற்போது ஜிகுஜிகு மாடர்ன் உடையில், ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.