மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. அசால்ட்டா தூக்கிட்டாரே.! செம தில்லுதான்!! பிரியா பவானி சங்கர் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
பின் மேயாதமான் படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. அவர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் 360 கிலோ எடையை அசால்ட்டாக தன் கால்களால் தூக்கி ஒர்க் அவுட் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பிரமித்துப் போயுள்ளனர்.