மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியா பவானி சங்கரின் காதலர் யார்? ரகசியத்தை போட்டு உடைத்த SJ சூர்யா!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி அதன்பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நாயகியாக நடித்தார் ப்ரியா பவனி ஷங்கர். இந்த சீரியல் மாபெரும் வெற்றிபெற இவரும் ஒரு காரணம்.
இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இவருக்காகவே இவரது ரசிகர்கள் சீரியல் பார்க்க தொடங்கினர். இவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்க, வெள்ளித்திரை பக்கம் சென்றார் ப்ரியா பவானி ஷங்கர். நடிகர் வைபவ் நடித்த மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியா. தற்போது SJ சூர்யாவுடன் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹலோ சகோ என்று நிகழ்ச்சியில் SJ சூரியாவும், ப்ரியா பவானி சங்கரும் கலந்துகொண்டனர். அப்போது ஸ்ருதி ஹாசன் எஸ் ஜே சூரியவிடம், பிரியா பவானி சங்கருக்கும் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு எஸ் ஜே சூர்யா, அவரோட பாய் ப்ரெண்டுதான் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் அவரது அப்பாவுடன் கூட அவர் அவ்வளவு நேரம் பேச மாட்டார். ஆனால், அவரது பாய் ப்ரெண்டுடன் தான் அதிகநேரம் பேசுவார் என கூறினார்.