#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகை ரச்சிதா.! அவரது கணவர் தினேஷ் என்ன கூறியுள்ளார் பாருங்க.! வைரல் பதிவு!!
விஜய் டிவியில்
ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோயினாக, மீனாட்சியாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவரை மீனாட்சி என்றே பலரும் அழைத்து வந்தனர்.
நடிகை ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற தொடரில் நடித்தனர். அதனை தொடர்ந்து அழகிய ஜோடியாக பல நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அவர்கள் அண்மையில் விவாகரத்து பெற்று பிரிவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் ரச்சிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு கூட அவர் தனது கணவரை பற்றி எதுவும் பேசவில்லை. இந்நிலையில் நடிகர் தினேஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனது மனைவி வெற்றி பெற வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.