#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரக்ஷிதா மகாலட்சுமிக்கு இப்படியொரு அரியவகை நோயா.!
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா மகாலட்சுமி. கன்னட மொழி நடிகையான ரட்சிதா தமிழில் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.
முதல் சீரியலிலே மிகவும் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரக்ஷிதா, தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
மேலும் ரட்சிதாவிற்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து உள்ளனர் என்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி வருகிறது. தொடர்ந்து ரட்சிதாவை குறித்து பல சர்ச்சையான செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ரட்சிதா தனக்கு அரியவகை நோய் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது "நான் உணவை மோந்து பார்த்தாலே குண்டாகி விடுவேன்" என்று கூறியிருக்கிறார் இதை எந்த அளவிற்கு உண்மை என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.