நானும் மக்களில் ஒருவர்தான்.. விஜயை சரமாரி கேள்வி கேட்ட ராஜேஸ்வரி ப்ரியா.!



Rajeshwari Priya question to Vijay

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. லியோ படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய், மிஸ்கின், கௌதம் மேனன், ரத்னகுமார், த்ரிஷா, மடோனா செபாஸ்டின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள வளரும் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் நடைபெறாததால் தற்போது வெற்றி விழாவை பட குழு கொண்டாடியுள்ளனர்.

vijay

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வழக்கம் போல் குட்டி கதையை கூறி உற்சாகப்படுத்தினார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள் பலரும் விஜய் பற்றி புகழ்ந்து பேசினர்.

இந்த நிலையில் லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vijay

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.

vijay

மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள்.

நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை.

மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.