மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினி-அனிருத்-ஏ.ஆர் முருகதாஸ் மெகா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!
ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். பேட்ட படம் ரிலிஸான உடனேயே முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
பல சர்ச்சைகளை களப்பிய சர்க்காரை தொடர்ந்து முரகதாஸ் இந்த படத்தை இயக்க இருப்பதால் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் ரஜினியின் அரசியல் பயணம் தொடர்பாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதுவரை படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் இப்புதிய படத்திருக்கும் இசையமைக்கிறார்.