மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், அந்த போஸ்டரில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் அடுத்தடுத்த பட அப்டேட்டுகளால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.