மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லோகேஷ் கனகராஜ் படத்தில் இளம் தோற்றத்தில் நடிக்கும் ரஜினி.. வெளியான அசத்தல் தகவல்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் இளம் தோட்டத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
இதனையடுத்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினி இளம் வயது தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.