திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி, கேஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு; அடுத்து என்ன புதிய படம் தான்.!
தமிழ் சினிமாவில் அப்போ இல்ல இப்போதுமே சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 167வது படமான தர்பார் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்தப் படத்தில ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், இசையமைபபாளராக அனிருத்தும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ரஜினியின் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
Here We Go! #Thalaivar167 #Darbar@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad pic.twitter.com/cjmy4gQJjy
— Lyca Productions (@LycaProductions) April 9, 2019
இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லமான போயஸ் தோட்டத்தில் சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் சினிமாவைப் பற்றி விவாதித்துள்ளனர்.
அப்போது ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையை கேஎஸ் ரவிக்குமார் சொல்லியுள்ளார். அந்த கதை ரஜினிகாந்துக்கு பிடித்துப்போக அடுத்த புதிய படத்தில் கேஎஸ் ரவிக்குமார் உடன் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்த கூட்டணி முத்து, படையப்பா போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளார்.