#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவியில் கிராமத்து வாசனையுடன் பிரமாண்டமாக துவங்கவுள்ள ராசாத்தி தொடர் எத்தனை மணிக்கு தெரியுமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது வரை முதல் இடத்தில இருப்பது சன் டிவி தான். அதற்க்கு முக்கிய பங்காக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள் அனைத்தும் சினிமாவை போல மிகவும் பிரமாண்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்கும் இளம் வயது முதல் முதியவர் வரை ரசிகர்கள் உள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சினிமா பிரபலங்கள் பலர் நடித்துவருவதால், ஆரம்பகாலத்தில் இருந்து இந்த தொலைக்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ராதிகா, ரம்யா கிருஷ்ணன், தேவையணி, குஷ்பு, ரேவதி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சன்டிவியில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், சன்டிவியில் விரைவில் புத்தம்புதிய தொடர் "ராசாத்தி" என்ற சீரியலை ஒளிபரப்ப உள்ளதாக ப்ரோமோவை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் "ராசாத்தி" தொடர் திங்கள் முதல் சனி கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பவுள்ளதாக ப்ரோமோ வெளியிட்டுள்ளனர்.
கிராமத்துத் திருவிழாவை கண்முன் கொண்டு வரும் #ராசாத்தி சீரியல் உங்கள் #சன்டிவி -யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.#Rasathi #RasathiOnSunTV #SunTV #SociallySun pic.twitter.com/TKf6CxBpgR
— Sun TV (@SunTV) September 18, 2019
கிராமத்து வாசனையுடன் மங்களகரமாக தொடங்கவுள்ள இந்த பிரமாண்ட சீரியலில் நடிகர் விஜயகுமார், நகைச்சுவை நடிகர் செந்தில், பொள்ளாச்சி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த ராசாத்தி தொடரை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ராசாத்தி தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பவுள்ளதாக ப்ரோமோ வெளியானதால் இல்லத்தரசிகள் ஆர்வத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ளனர். ஏனென்றால் இல்லத்தரசிகள் அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தொலைக்காட்சி முன்பு அமரும் நேரம் இரவு 9 மணி என்பதால், இந்த தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அணைத்து பெண்களையும் மகிழ்வித்துள்ளது.