மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைந்த சாய் பல்லவி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. இவரது 23 வது திரைப்படத்தை கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க உள்ளார்.
மீனவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தில், நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு நாக சைதன்யா, சாய் பல்லவி ஜோடி லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.