மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பறக்கவிட்டு பரவச படுத்தும் சாய் பல்லவி!! லைக்ஸ் குவியும் லேட்டஸ்ட் இன்ஸ்ட்டா புகைப்படங்கள்..
நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
மலையாள படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.
பிரேமம் படத்திற்கு முன்பே அம்மணி தமிழ் சினிமாவில் தாம் தூம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும் கூட, பிரேமம் படம்தான் இவரை இந்திய சினிமாவில் பிரபலமடைய செய்தது.
மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. ஆனால், மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தது.
சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சாய் பல்லவி, தனது சகோதரி எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.