மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேஜிஃஎப் நாயகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி.. வெளியான அசத்தல் தகவல்.!
பிரபல கன்னட நடிகர் யஸ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ள யஷ் கே ஜி எஃப், கே ஜி எஃப் 2 என்ற படத்தில் நடித்தது மூலம் இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக பிரபலமாகியுள்ளார். தற்போது மூன்றாவது பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் யஷின் 19ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. அதன்படி இந்த படத்தின் தலைப்பு வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குனர் கீது மோகந்தாஸ் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் படத்தில் யஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள இளம் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.