மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடை.. பிரேமம் படத்துக்கு முன்பே சல்சா நடனம் ஆடிய சாய் பல்லவி.. வைரல் வீடியோ..
நடிகை சாய் பல்லவி ஆடிய சல்சா நடனம் ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியளவில் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. முன்னதாக மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சாய்பல்லவி. இந்நிலையில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அவர் நடிப்பதற்கு முன்னதாகவே, கடந்த 2013- ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் ஒரு பல்கழைக்கழக விழாவில் சல்சா நடனமாடி அசத்தியுள்ளார்.
அரைகுறை ஆடையில், சாய் பல்லவியின் சல்சா நடன அசைவுகள் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.