ஷங்கரை மிஞ்சிய சலார் பட இயக்குனர்.. ஒரே ஒரு காட்சிக்கு இவ்வளவு செலவா?



Salar movie costly fight scene

கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். தற்போது இவர் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Salar

இந்த திரைப்படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்த விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது நீண்ட படத்தின் சண்டைக் காட்சி ஒன்றுக்காக அதிக செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Salar

அந்த வகையில் சலார் படத்தின் சண்டைக் காட்சி ஒன்றுக்காக சுமார் 750 வாகனங்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று ஒரு காட்சி மற்றும் பாடலுக்காக அதிக அளவில் செலவு செய்பவர் இயக்குனர் சங்கர் தான். தற்போது அவரையே இவர் மிஞ்சி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.