#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொள்ளாச்சி விவகாரம் குறித்து அசால்டா சமந்தா இப்படி சொல்லிட்டாரே.! ஷாக் ஆன ரசிகர்கள்.!
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கவேண்டும் என குரல் எழுப்பி வந்தனர்.
மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சமந்தாவிடம் பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சமந்தா அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும். எப்பொழுது நன்மை தருவதை மட்டுமே பேசுவோம் என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலர் ஆவேசமடைந்துள்ளனர்.