#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இடுப்பில் முன்னாள் கணவரின் பெயரை பச்சை குத்தியிருக்கும் சமந்தா.! விவாகரத்திற்கு பிறகு மறுபடியும் காதலா.?
டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்கள் முதன் முதலில் 'ஏம் மாயம் சேசவா' திரைப்படத்தில் ஒன்றாக நடிக்க தொடங்கி இதன் பின் ஆட்டோ நகர் சூர்யா, மனம், ஓ பேபி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வந்தனர். இந்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதுபோன்ற நிலையில், 2017ஆம் வருடம் குடும்பதினரின் சம்மதத்துடன் திரையுலக நட்சத்திரங்கள் முன்னிலையில் நாக சைதன்யா, சமந்தா இருவரும் திருமணம் செய்து கொண்டனர் நான் கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர்.
இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் கிசுகிசுக்கபட்டு வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தனர். தற்போது சமந்தாவின் இடுப்பில் நாக சைதன்யா பெயர் பச்சை குத்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. விவாகரத்தானாலும் இன்னும் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.