அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நடிகை சஞ்சனா கல்ராணி மொட்டை அடித்து கொண்டாரா?? ஏன் இப்படி? வெளிவந்த உண்மையால் செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ், மலையாளம், கன்னட சினிமாவில் நடித்துள்ளார். மேலும் சஞ்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் கைதானார். சில மாதங்கள் சிறையில் இருந்து பின் ஜாமீனில் வெளியே வந்த அவர் அஜீஸ் பாஷா என்ற டாக்டரை திருமணம் செய்துகொண்டார்.
அவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சனா தனது இன்ஸ்டாகிராமில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நான் கடவுளிடம் கேட்டுக் கொண்டதை நடத்தியதற்காக என் தலைமுடியை தியாகம் செய்தேன். பார்ப்பவர்களின் கண்களில்தான் அழகு உள்ளது என கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சஞ்சனா அழகிய முடியோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தான் மொட்டை அடிக்கவில்லை என்றும், முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் வகையில் அவ்வாறு செய்ததாகவும், அவர் தனது குடும்பத்தினர், ரசிகர்கள் ஆகியோரை ஏமாற்ற வேண்டி மொட்டை அடித்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.