மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜாராணி சஞ்சீவ்- ஆலியா மானசா வீட்டில் மற்றுமொரு புதுவரவு! தீயாய் பரவும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி என்ற தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
தொடரில் கணவன்,மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் ஒருவரையொருவர் காதலித்து
கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆலியா விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் நடித்து வருகிறார். மேலும் சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடிக்கிறார்.
இந்நிலையில் சஞ்சீவ் தற்போது மீண்டும் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கார் முன்பு ஆலியா, சஞ்சீவ் மற்றும் அவரது குழந்தையுடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.