மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறி, கூல் சுரேஷின் சர்ச்சை செயல்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்: காரணம் இதுதான்.!
ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் சரக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர், செய்தியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். படத்தில் மன்சூர் அலிகான், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார், கிங்ஸ்லி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்றைய நிகழ்வில் கூல் சுரேஷும் விழா மேடையில் இருந்த நிலையில், 2 மாலைகளை எடுத்து வந்து ஒன்றை தனது கழுத்தில் போட்டுக்கொண்டார்.
மற்றொரு மாலையினை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியின் கழுத்தில் போட, அதனால் ஆவேசமடைந்த பெண்மணி உடனடியாக அதனை கீழே தூக்கி போட்டார்.
இந்த விஷயம் பெரும் கண்டனத்தை சந்திக்கவே, விழாவில் இருந்த மன்சூர் அலி கான் பெரும் அதிர்ச்சியடைந்து அப்போதே கண்டித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகானும் மன்னிப்பு கேட்டார்.
எதுக்கு எல்லா பட விழாவுக்கும் இந்த அரைவேக்காட்டு தற்குறி கூல் சுரேஷை கூப்பிடுறாங்கன்னு தெரியல... இந்த கோமாளி செய்த இந்த அநாகரீகமான செய்கைக்கு கண்டிப்பாக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்...
— kodanki (@onlykodanki) September 19, 2023
எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைப்பதுதான் சரி... 😡#சரக்கு #mansuralikhan #coolsuresh… pic.twitter.com/Dvbu2lAfs8
விழா மேடையில் இருந்த கூல் சுரேஷையும் அழைத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தனர். கூல் சுரேஷ் எப்போதும் படத்தை ப்ரமோட் செய்கிறேன் என்ற பெயரில் சர்ச்சை செயல்களை செய்துவந்த நிலையில், தற்போது பெண்ணிடம் அத்துமீறி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டார். தங்கச்சி சாரிங்கம்மா என மன்னிப்பு கேட்டார்.