பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா... சுவாரசியமான சரண்யா - பொன்வண்ணன் காதல் காவியம்... அப்பவே அப்படி மாஸ் பண்ணிருக்காங்க..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சரண்யா. தற்போது அம்மா நடிகை என்றால் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். இதற்கு முன்னதாக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும்.
இந்த நிலையில் நடிகை சரண்யாவின் காதல் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பொன்வண்ணன், சரண்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து நடிகை சரண்யா கூறுகையில், அவர் என்னிடம் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கூட சிரித்து பேசியது கிடையாது. ஆனால் திடீரென ஒருநாள் போன் செய்து, "நான் ஒரு படம் எடுக்கிறேன். உங்கள் டேட்ஸ் வேண்டும் என்று கேட்டார்.
எத்தனை நாள்? என கேட்டதற்கு 70 வருஷம் என கூறிய நிலையில், காமெடிக்கு பேசுகிறார் என நினைத்து நான் யோசித்து சொல்கிறேன்"என்று கூறிவிட்டேன். அதன் பின் பத்து நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து கேட்டார். அப்பொழுதுதான் அவர் சீரியஸாகவே பேசுகிறார் என்று எனக்கு தெரிந்தது.
இதனால் அவரைப்பற்றி விசாரிக்க தொடங்கிய நிலையில், "பாரதிராஜா சார் தான் அவரைப் பற்றி உயர்வாக கூறினார்". என்று சரண்யா கூறி இருக்கிறார். அதன் பின் இரு குடும்பத்தினரும் பேசி திருமணம் நடைபெற்று இருக்கிறது.
பொன்வண்ணன் மாம்ஸ் புரோபோசல்... pic.twitter.com/El7bjicLZq
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 & 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹 (@FilmFoodTravel) August 13, 2022