தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"கள்ள கதையில் கள்ள ஓட்டு பற்றிய படம்" - சர்க்காரை கடுமையாக சாடிய தமிழிசை!
சர்க்கார் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன், கள்ள கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர். என்று விமர்சனம் செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படம் சர்க்கார். இந்த நிலையில் இப்படத்தின் கதையானது செங்கோல் என்னும் படத்திலிருந்து எடுக்கப்பட்டதாக படத்தின் துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதிக்குள் முருகதாஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில்,இன்று இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குநர் முருகதாஸ் மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளது மேலும், ’சர்கார்’ பட துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில், முதல்வர் கணவரோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி நடத்த முடியும். கள்ள கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நடிகர் விஜய்யின் முந்தைய படமான மெர்சல் படத்திற்கும் பிஜேபி கட்சியின் சார்பாக பல எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்தது. இந்த நிலையில் தற்போதும் இதே நிலை உருவாகியுள்ளது. இதற்கு காலம் தான் சரியான பதில் சொல்ல வேண்டும்.