மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனம்வருந்தி வீடியோ வெளியிட்ட நடிகை சாயிஷா.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் சாயிஷா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். முதன் முதலில் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டினார். இவ்வாறு பிஸியாக இருக்கும் போதே ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்து கொண்டார்.
இதன்பின் தற்போது மீண்டும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாய்ஷா, அடிக்கடி தனது குழந்தை மற்றும் குடும்பத்தின் புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட சாயிஷா, சென்னை வெள்ளம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறினார், "வெளியே வந்து எல்லாருக்கும் உதவ வேண்டும். ஆனால் வீட்டில் குழந்தை இருப்பதால் வெளியே வரவே பயமாக உள்ளது. உங்களுக்காக நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்" என்று மனம் வருந்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.