மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.! மீண்டும் விவாகரத்தா?? இயக்குனர் செல்வராகவன் போட்ட டுவீட்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ரசிகர்களிடையே பிரபலமானவர் செல்வராகவன். அவர் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். செல்வராகவன் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
மேலும் செல்வராகவன் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என பதிவிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் செல்வராகவன் ஏன் இவ்வாறு பதிவிட்டுள்ளார், இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்ய போகிறாரா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022