#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏன் இப்படி செய்றீங்க?? விஜய் டிவியை வெளுத்து வாங்கி, சவால் விட்ட பிரபல சீரியல் நடிகை! அப்படி என்னதான் நடந்தது??
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 7வது விஜய் டிவி விருதுவழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களும் ஏராளமான விருதுகளை பெற்றது.
இந்நிலையில் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மரகதம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷியமளா என்பவர் கையில் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, போட்ருக்க ட்ரெஸ் என்னுது ஆனா புடிச்சிருக்க அவார்டு எனது இல்லை. விஜய் விருது விழாவில் கலந்து கொண்ட பின்பு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு அரங்கத்தில் காற்றுக்கென்ன வேலியின் ஒரு போஸ்டர் கூட இல்லை. நாங்கள் கடைசி பெஞ்சர்களாக இருந்தோம். ஒரு விருது கூட பெறவில்லை.
காற்றுக்கென்ன வேலி தொடர் நான் பார்த்த பெரும்பாலான சீரியல்களை விட மிகமிக சிறந்தது. பின்பு ஏன் இந்த பாரபட்சமான நடுவர் மன்றம்? நாங்கள் என்ன யாருமே பார்க்க விரும்பாத கருப்பு ஆடுகளா? பிற சீரியல்களை விளம்பரப்படுத்துவது போல் ஏன் விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி தொடரை விளம்பரப்படுத்துவதில்லை? எங்கள் குழுவை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதில்லை.
எல்லாம் நேர்மையானதாக இருந்தால், விஜய் டிவி எங்களுக்கு ஒரு பிரைம் டைம் ஸ்லாட்டை கொடுங்கள். நாங்கள் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறோம் என்பதை அப்பொழுது பாருங்கள். அதுதான் உண்மையான போட்டி மனப்பான்மை. இந்த சவாலை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.