மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைய தளபதி விஜய்க்கு இப்படியொரு நோயா.! வெளியான வீடியோவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியானது லியோ திரைப்படம். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T எனும் பெயர் பெற்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை அறிந்து அஞ்சலி செலுத்த வந்தார் விஜய். அப்போது விஜயின் முகம் வீங்கி கன்னம் உப்பி இருந்ததால் என்ன காரணம் என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.
இதற்கான காரணம் குறித்து பலரும் கேட்டு வந்த நிலையில், மருத்துவ நிபுணர் மனோ என்பவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதாவது தொண்டை பகுதியில் இருக்கும் சுரப்பியில் கோளாறு இருந்தால் கன்னம் வீங்கும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.