மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலை தொடர்ந்து களம் இறங்கும் ஸ்ருதிஹாசன், இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள், வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை நிறைவு செய்துவிட்டார்.
அவரை தொடர்ந்து அவரது மகள் ஸ்ருதிஹாசனும் விரைவில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள “ஹலோ சகோ” என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களம் இறங்கவுள்ளார்.
மேலும் ஸ்ருதிஹாசன் இதற்கான ப்ரமோ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இவை வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விஷால், வரலட்சுமி சரத்குமார் போன்ற பிரபலங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள நிலையில் தற்போது ஸ்ருதிஹாசனும் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.