வேற லெவல்தான்! முதல் தமிழ் நடிகர் பெருமையை பெற்ற சிம்பு! அதுவும் எதில் பார்த்தீங்களா!!



Simbu crossed 10 million followers in instagram

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது கியூட்டான, அசத்தலாக நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஆனால் உடல் எடை கூடியநிலையில் இடையில் சில காலங்கள் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியையே தழுவியது. பின் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார். இந்த படம்   விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட்டானது. 

அதனைத் தொடர்ந்து அவரது கைவசம் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்கள் உள்ளன. வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிம்பு தற்போது சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

simbu

இதற்கிடையில் கடந்த 2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நடிகர் சிம்பு, தற்போது 10 மில்லியன் பின்தொடர்பவர்களை  பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமையை சிம்பு பெற்றுள்ளார்.