அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
தலைகுப்பற கவிழ்ந்த டிராக்டர்; கணவர், பச்சிளம் குழந்தை முன் தாய் துள்ளத்துடிக்க பலி.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 30). இவரின் மனைவி சத்யா (வயது 24). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
விவசாய பணிகளில் மும்மரம்
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களின் அன்புக்கு அடையாளமாக 2 வயதுடைய சாஷிகா என்ற மகளும் இருக்கிறார். சொந்தமாக டிராக்டர் வைத்துள்ள ரமேஷ், இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விவசாய நிலத்தில் உழும் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: தனியார் அருவி பயன்பாட்டால் சோகம்; ஜீப் ஓட்டுநர் பலி., தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?.!
டிராக்டர் கவிழ்ந்து சோகம்
அச்சமயம் டிராக்டரில் ரமேஷ், அவரின் மனைவி மற்றும் மகள் இருக்க, நிலத்தை உழுதுகொண்டு இருந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சாஷிகாவை தூக்கிக்கொண்டு ரமேஷ் வாகனத்தில் இருந்து வெளியே விழுந்தார்.
பெண் பலி., இருவர் உயிர்பிழைப்பு
டிராக்டருடன் பள்ளத்திற்குள் விழுந்த சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்யா டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட காரணத்தால், அவரால் தப்பிக்க வழி இன்றி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு பேருந்து மோதி மருந்து விற்பனை பிரதிநிதி பரிதாப பலி; 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!