மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி நடிகர் சதீஷை ஏமாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன்! என்ன நடந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி கலைஞராக அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் சில காட்சிகளில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.
தற்போது பல்வேறு படங்களில் நடித்துவருகிறார் சிவா. இந்நிலையில் நடிகர் சிவகாத்திகேயன் தன்னை ஏமாற்றிய சுவாரசிய அனுபவம் பற்றி கூறியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ். இவர் எதிர்நீச்சல், வேலைக்காரன், ரெமோ போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹல்லோ சகோ என்ற நிழச்சியில் பேசிய சதீஷ், ஒருநாள் சூப்பர் ஸ்டார் உதவியாளர் பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. சூப்பர் ஸ்டார் உங்களிடம் பேசவேண்டும் என்று கூறுவதாகவும், தமிழ் படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது அதை பாராட்டத்தான் சூப்பர் ஸ்டார் அழைத்தார் என்றும் கூறியதாகவும், ஆனால் அதை நான் நம்பவில்லை என்றும் கூறினார்.
பின்னர் அவர்கள் பேசியதை பார்த்து ஒரு கட்டத்தில் நான் நம்பிவிட்டேன், பின்னர் சூப்பர் ஸ்டார் என்னிடம் பேசினார். எனது நடிப்பு பற்றி என்னை பாராட்டினார். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். இதனை ட்விட்டரில் பதிவிடலாமா என்று கூட யோசித்தேன். இருந்தாலும் சற்று சந்தேகமாவே இருந்தது.
இந்நிலையில் ஐந்து நிமிடம் கழித்து சிவகார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போதே முடிவு செய்துவிட்டான். இது சிவா பார்த்த வேலைதான் என்று சதீஷ் தெரிவித்தார்.