திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் பிரபலத்துக்கு வில்லனாகிறாரா எஸ்.ஜே. சூர்யா... யார், எந்த படத்தில் தெரியுமா.?
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்மூலம் நட்புனா என்னா தெரியுமா,லிஃப்ட், போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரணஇயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் சிவா இயக்கத்தில் நெல்சன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.