மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மன்னனாக போகும் எஸ்.ஜே சூர்யா.. எந்த படத்தில் தெரியுமா.?
2001ஆம் ஆண்டு மின்னலே" திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார் கெளதம் மேனன். தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து தற்போது விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், ஆர். பார்த்திபன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொதுவாகவே காதலுடன் ஆக்ஷன் காட்சிகளும் கலந்து படமாக்கி வரும் கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தில் 15 நிமிடம் தான் காதல் காட்சிகள் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் எந்த நடிகரிடம் கதை சொன்னாலும், ஜெய்லர், விக்ரம் மாதிரியான ஆக்ஷன் படங்களில் தான் நடிக்க விரும்புகின்றனர்.
எனவே தன்னை புதுமையாக எப்படி வெளிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற கதைகளைத் தேடும் எஸ்.ஜே. சூர்யாவிடம் நான் ஒரு காதல் கதையைக் கூறியுள்ளேன். கூடிய விரைவில் இந்தப் படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கலாம்" என்று கூறியுள்ளார்.