மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை சினேகாவின் மகளா இது.! எப்படி வளந்துட்டார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்தமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா. இவர்கள் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினர். பின்னர் இருவரும் 2012 ஆம் வருடம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சினேகா தற்போது தளபதி விஜயின் நடிப்பில் உருவாகும் Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சினேகா மகள் இன்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து கூறி லேட்டஸ்ட் புகைப்படங்களை சினேகா- பிரசன்னா ஜோடி சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் சினேகாவின் மகள் நன்கு வளர்ந்துவிட்டார் என கூறிவருகின்றனர்.