#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் வீட்டில் நடந்த கொடூர சண்டை! மண்டை உடைந்து ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பலவாறு பிரபலங்களை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் ஹிந்தியில் கடந்த செப்டம்பர் மாதம் பிக் பாஸ் சீசன் 12 ஆரம்பமானது. இதில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்ரீசாந்தும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி மூலம் ஸ்ரீசாந்த்திற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீசாந்த் Surbhi Rana என்பவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.
வேகமாக சுவரில் மோதிக்கொண்டதால் ஸ்ரீசாந்த்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.