#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி ஹரிஹரனின் மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவிக்கும் போது நடிகை ஸ்ருதி ஹரிகரன் தான் திருமணம் ஆனவர் என்று இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த விஷயத்தை தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
#MeeToo மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிடுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ருதி ஹரிகரன் கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மீது பாலியல் குற்றம் சுமத்தியது பரபரப்புக்குள்ளானது.
இதில் நடிகை ஸ்ருதி, படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் வேண்டும் என்றே என்னை கட்டிப்பிடித்து முதுகில் தடவினார். மேலும் அவரது அறைக்கு என்னை வருமாறும் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார் என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்தனர். மேலும் அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வதாக அர்ஜுன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்தார் .
அப்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தான் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமா துறையில் திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவு அவர்களை ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். இந்த நிலையில் அவருடைய திருமண ரகசியம் வெளிவந்ததால் சினிமாவில் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறலாம்.