தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆடல், பாடல் என சந்தோசமான தருணத்தில், கண்ணீரில் மூழ்கிய சன் டிவி அரங்கம்!
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 என்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சமூதாயம், இலக்கியம், சினிமா, தன்னம்பிக்கை என பல துறைகளில் சாதித்த சாதனை மனிதர்களுக்கான நம்பிக்கை விருதினை வழங்கி வருகிறது ஆனந்த விகடன்.
ஆடல், பாடல், சாதனை விருதுகள் என கலகலப்பாக சென்றுகொண்டிருந்தது அந்த அழகான விழாமேடை. ஏதோ சாதித்துவிட்ட புன்னகையுடன் விருதுபெற்றார்கள் சாதனையாளர்கள். சாதனை மனிதர்களுக்கே விருது வழங்கிவிட்டோம் என்ற பெருமையுடன் விருது வழங்கியவர். இப்படி புன்னகையுடன் சென்ற விழா மேடையில் அரங்கேறியது அந்த சோகமான நிகழ்வு.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, உயிர் வாழ சுத்தமான காற்று, சுகாதாரமான வாழ்க்கை இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது காவல்துறை. உரிமைக்காக போராடிய ஒரே காரணத்திற்காக உயிரை விட்டனர் 13 அப்பாவி மக்கள்.
உயிர் நீத்த அந்த 13 வீரர்களின் பெற்றோர்களை, உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களை விகடன் நம்பிக்கை விருதுகள் மேடையில் நிறுத்தியது விகடன் குழு. அதுவரை சந்தோச வெள்ளத்தில் இருந்த விழா மேடை, தனது 18 வயது மகளின் இறப்பை கூறி அழுத்த தாயின் கண்ணீரில் மூழ்கியது.
மற்றவர்களுக்கு ஒரு வேதனை என்றால் என் மகளின் கண்ணில் கண்ணீர் வடியும், அதே மகள் மீது துப்பாக்கி சூடு பட்டு, ரத்தமும் சதையுமாக அவள் எவ்வளவு வேதனையுடன் உயிர் விட்டிருப்பாள் என்று அந்த தாய் கூறிய தருணம் அங்கு சுற்றி இருந்த அனைவரையும் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க செய்தது.