மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவம்கிடந்த ரஜினி ரசிகர்களுக்காக வெளியான அசத்தல் கிளிக்ஸ்.. தமிழ் - மலையாள திரையுலக சூப்பர்ஸ்டார்கள் சந்திப்பு.!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன் லால், ஷிவ ராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, திரிஷா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் வேலைகள் தாமதம் காரணமாக ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போகலாம் என தெரியவருகிறது.
ஜெயிலர் படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகை சேர்ந்த சூப்பர்ஸ்டார்கள் இணைந்து நடிப்பதால், படம் இந்திய அளவில் மெகா ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் மோகன் லால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் எடுத்துக்கொண்ட அசத்தல் போட்டோ வைரலாகி இருக்கிறது.