மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லைவில் வெர்ஜினா என்று கேள்வி கேட்ட ரசிகர்... அதிரடியாக பதிலளித்த ஸ்ருதிஹாசன்.!! அதிர்ச்சியான நெட்டிசன்கள்.!?
தென்னிந்திய திரைப்பட நடிகையான ஸ்ருதி ஹாசன் இவரது தந்தை நடித்த ஹே ராம் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். இதன்பின் பல படங்களில் தொடர்ந்து பாடியும், நடித்தும் இருக்கிறார். இவ்வாறு பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமைகளை காட்டி வருகிறார். மேலும் இவர் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். முதல் படத்திலயே இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதன்பின் இவர் பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, லாபம் போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களோடு நடித்திருந்தாலும் ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் பெரியளவில் கைகொடுக்கவில்லை. இதனால் படவாய்ப்பை இழந்து சினிமாவிற்கு சில காலம் பிரேக் விட்டிருந்தார்.
மேலும் சொந்த காரணத்தினால் மன அழுத்தத்தில் இருந்தேன் தற்போது மீண்டும் விட்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' திரைப்படத்தில் பிரபாசுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாலிவுட் படமான தி ஐ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது அவரின் காதலருடன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசினார். இதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்க வெர்ஜினா என்று கேட்டார். அதற்கு வெர்ஜினுக்கு ஸ்பெல்லிங் கத்துகிட்டு வாங்க பதில் சொல்றேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்த மற்ற ரசிகர்கள் அந்த நபரை திட்டி வருகின்றனர்.