#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல, தளபதி அரசியலுக்கு வருவார்களா? உலககோப்பையை சரியாக கணித்த ஜோதிடரின் கணிப்பு.!
கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடர் பாலாஜி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறுகையில், இந்த ஆண்டு கணிப்பின் படி, 2019 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடக்கிறது.
இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதும்.
SHOCKING : This guy predicted #CWC19 scenario long back! #TeamIndia #INDvsNZ #NewZealand pic.twitter.com/DHUwpmZFbs
— Tamilnadu Theatres Association (@TN_Theatres) July 11, 2019
2019ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை, இதுவரை வெல்லாத அணியே கைப்பற்றும் என்று கூறியிருந்தார். இந்த தொடரில் கேன் வில்லியம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்றும் கணித்திருந்தார். இந்தநிலையில் அவர் கூறியிருந்த படியே அனைத்தும் நடந்தது.
இந்நிலையில் தல அஜித் தளபதி விஜய்யின் எதிர்காலம் குறித்து கணித்துள்ள ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும்போது: விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார். ஆனால், அவரது மன்றங்கள் மூலம் நல்லது செய்து கொண்டே இருப்பார். பிகில் படம் பெரிய ஹிட் கொடுக்கும். துப்பாக்கி படத்தை போன்று எந்தப்படமும் ஹிட் கொடுக்கவில்லை. பிகில் படம் மாபெரும் ஹிட் படமாக இருக்கும்.
பெரும்பாலும் முகத்தோற்றத்தை மாற்றி படங்களில் நடிப்பது இல்லை. அப்படியிருந்தாலும் அந்தப்படம் சரியாக வந்ததில்லை. உதாரணமாக புலி படத்தை சொல்லலாம். அதனால், இந்த பிகில் படம் துப்பாக்கியைப் போன்று நல்ல ஒரு ஹிட் கொடுக்கும் என்றார்.
இறுதியில், அஜித்தும் அரசியலுக்கு வரமாட்டார். அவர், மக்கள் பிரச்சனைகளுக்கான படங்களை மட்டும் தேர்வு செய்து நடிப்பார் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.