#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலயா? தளபதியா? விஜய் சேதுபதி கூறிய நறுக் பதில்! என்ன சொன்னார் தெரியுமா?
தலயா, தளபதியா என்ற கேள்விக்கு நறுக் பதில் கூறியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 இல் விஜய் சேதுபதிக்கு சாதனை மனிதருக்கான விருது வழங்கப்பட்டது.
விஜய் சேதுபதி விருதினை வாங்கும்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்றுதான் தலயா, தளபதியா? இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி. இது என்ன கேள்வி? எங்கு பார்த்தாலும், தலயா, தளபதியானு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் இவ்வாறு கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அவர்களை அவர் அவர் வாழ்க்கையில் வாழவிடுங்கள்.
தல ரசிகர்கள் அவர்க்கு ரசிகர்களா இருக்கட்டும், தளபதி ரசிகர்கள் அவரது ரசிகராக இருக்கட்டும், இனி இப்படி கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் என்று தடாலடியாக பதில் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.