#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் மகன் எனது கனவை நிறைவேற்றவில்லை விஜயின் தந்தை சந்திரசேகர் பேட்டி.!
சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தளபதி 63 படப்பிடிப்பு ஆரம்பமாகி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தளபதி 63 படம் விளையாட்டு சம்மந்தமான படமாக இருக்கும் என்றும், கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாகவும், அதற்காக 16 பெண்கள் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், “பிரதமராக இருக்கும் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்கக் கூடாது என தமிழர்களின் முடிவு. அதில் அவர்கள் மிக தெளிவாக உள்ளனர்.
நான் கடந்த 40 வருடங்களாக சினிமாவில் உள்ளேன். முன்பு சினிமாவில் நாணயம் இருந்தது. தற்போது தமிழ்ராக்கர் படங்களை போட்டி போட்டு இணையதளங்களில் வெளியிடுவதால் சினிமா அழிந்து வருகின்றது.
சினிமாவை காப்பாற்ற வேண்டுமானால் அது அரசால் மட்டும் தான் முடியும். தற்போது அந்த அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்பு சினிமாவை நேசித்து செய்து வந்தனர். காதலித்து செய்யக்கூடிய பணி. ஆனால் தற்போது சினிமாவில் வியாபாரிகள் வந்துவிட்டனர்.
மக்களவை தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்விக்கு, அது அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் என் மகன் விஜய்யை டாக்டராக்க நினைத்தேன். ஆனால் அவர் ஆக்டராகி விட்டார். ” என எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.