மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில்... ஹீரோ இவர் தான்! பரபரப்பான தகவலை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக வலம் வருபவர். தற்போது தனது லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு தளபதி 68 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.
இவரது மூத்த மகன் ஜெசன் சஞ்சய். இவர் தனது தந்தையைப் போல் நடிகராக விரும்பாமல் தனது தாத்தா எஸ்ஏ. சந்திரசேகர் போல இயக்குனராக களமிறங்குகிறார். வெளிநாடுகளுக்குச் சென்று திரைப்பட இயக்கம் பற்றி படித்து வந்த இவர் குறும்படங்களை இயக்கி வந்தார்.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஜெசன் சஞ்சய். இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் யார் என்பது போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை .
தற்போது இது தொடர்பான தகவல்களை மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் கொடுத்த தகவல்களின்படி ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதர்வா மற்றும் கவின் இவர்கள் மூவரில் ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.