அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
திருச்சி: மத்திய சிறை ஊழியர் திடீர் மரணம்.!! காவல்துறை கண்ணீர் அஞ்சலி.!!
திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளராக பணியாற்றிய நபர் நேற்று மதியம் சிறை வளாகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மரணமடைந்த அவரது உடலுக்கு சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிறை அலுவலக மேலாளர் திருமுருகன்
திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தவர் திருமுருகன். 49 வயதான இவர் திருச்சி மத்திய சிறை வளாக குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் சிறை காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் திருச்சி மத்திய சிறை அலுவலக குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!
இதையும் படிங்க: விரட்டிவிரட்டி காதலிக்கச்சொல்லி தொல்லை; போக்ஸோவில் கம்பி எண்ணும் இளைஞர்.!