#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றசாட்டை வைத்த சின்மயிக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து.!
கவிஞர் வைரமுத்து சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
திரையுலகமே போற்றும் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகபாடகி சின்மயி அதிரடியான பாலியல் குற்றச்சாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் கடந்த 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை தொந்தரவு செய்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து மறைமுக பதிலடி கொடுக்கும்வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) 10 October 2018
”அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்“ என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.