#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கருப்பன் குசும்புக்காரன் காமெடி புகழ் நடிகருக்கு இப்படி ஒரு சோகமா?
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற இந்த படத்தில் சூரிக்கும் அப்பாவாக கருப்பசாமி கோவில் பூசாரியாக நடித்தவர் தவசி.
இப்படத்தில் சாமி ஆடிக்கொண்டே கருப்பன் குசும்புக்காரன் என்று அவர் செய்யும் காமெடி அதிக வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இயக்குனர் ராஜ் கபூர் எடுக்கும் சீரியலில் நடித்து ஒன்றில் நடித்து வருகிறார். திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.
ஷூட்டிங் முடிந்து அவர் வீட்டிற்கு காரில் திரும்பி சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டில் சிவா சம்பவ இடத்திலையே உயிர் இழந்தார். மேலும் காரில் இருந்த தவசிக்கும் படு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.