மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவி தொகுப்பாளரை காதலித்த விஜய் ஆண்டனி.. போனில் பேசிய ஐந்தாவது நாளிலேயே திருமணம்.? ஷாக்கான ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த படங்களில் களமிறங்கி இருக்கிறார்.
இவர் கதாநாயகனாக பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், திமிரு புடிச்சவன், நான், தமிழரசன், கொலைகாரன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று திரையரங்கில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற நிலையில், விஜய் ஆண்டனி ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்களையும் திருமணம் ஆகுவதற்கு முன்பு தன் மனைவியை காதலித்த கதையையும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அப்பேட்டியில் விஜய் ஆண்டனி, எனது மனைவி சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நான் 'சுக்கிரன்' படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். படத்தின் இசையை பார்த்து நன்றாக இருக்கிறது என்று எனக்கு கால் பண்ணி கூறினார். பேசிய மூன்றாவது நாளிலேயே நான் என் காதலை கூறிவிட்டேன். ஐந்தாவது நாளில் அம்மாவிடம் காணவில்லை இவதான் என்னுடைய மனைவி என்று கூற எங்களுக்கு திருமணம் நடந்தது. இவ்வாறாக அப்பெட்டியில் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த 'பூனையும் பால் குடிக்குமா' என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.