திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் ஆண்டனியின் ரத்தம்.! 5 நாட்களில் குவித்த வசூல் எவ்வளவு தெரியுமா??
தமிழ்படம், தமிழ்படம் 2 போன்ற திரைப்படங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ரத்தம். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். ரத்தம் திரைப்படம் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரத்தம் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் படைத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இரத்தம் திரைப்படம் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.