மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நோட்டாவுக்கு போடாதீங்க ப்ளீஸ்"... ரோமியோ திரைப்பட விழாவில் விஜய் ஆண்டனி வேண்டுகோள்.!
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில் தன்னை அடையாளப்படுத்தியவர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ரோமியோ திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று திரைக்கு வர இருக்கிறது. திரைப்படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ் யோகி பாபு தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . கோவையில் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய விஜய் ஆண்டனி நோட்டாவிற்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களிக்காமல் யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் படத்தின் இயக்குனர் உட்பட திரை கலைஞர்கள் அவருடன் கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படங்கள் ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படம் வெற்றியடையும் என்று எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.